வானத்தில் இருந்து வந்த தேவதை பாலியல் பொம்மையான அதிசயம்

0
558


வானத்திலிருந்த வந்த தேவதை எனத் தெரிவித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த பொம்மையொன்றை அது ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.


வானத்திலிருந்த வந்த தேவதை எனத் தெரிவித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த பொம்மையொன்றை அது ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்தோனேஷிய கடற்கரையொன்றில் கிடந்த பொம்மையொன்று மனித சாயலில் இருப்பதை கண்ட கிராமவாசிகள், அதனை வானத்திலிருந்த வந்த தேவதை என வர்ணித்து, வீட்டில் வைத்து அழகுபார்த்து வந்தனர்.

இந்தோனேஷியாவின் பெங்காகி தீவிலுள்ள கடற்கரையோரத்தில் இந்த பொம்மை மிதந்துகொண்டிருப்பதை அவதானித்த மீனவரொருவர் அதனை எடுத்து தனது கிராமத்துக்கு எடுத்துச் சென்றார்.


சூரிய கிரகணம் ஏற்பட்டதற்கு மறுநாள் இந்த பொம்மை கண்டெடுக் கப்பட்டதாலும்  வெள்ளை ஆடையொன்று இந்த பொம்மைக்கு அணிவிக்கப் பட்டிருந்ததாலும் பெண்ணைப் போன்ற தோற்றத்தை அவதானித்ததாலும் அதனை கண்டெடுத்த மீனவர் ஒரு தேவதையாகக் கருதினார்.

கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த பொம்மையை அக் கிராமத்திலுள்ளவர்கள் அதற்கு தினமும் பலவிதமான ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தனர்.


கிராமவாசிகள் வானத்திலிருந்து வந்த தேவதை என அந்த பொம்மையை வர்ணித்தனர்.  தேவதைப்பொம்மை குறித்த தகவல் சில நாட்களில் உள்ளூர் ஊடகங் களிலும் பரவத் தொடங்கியன.

அதையடுத்து, பொலிஸாரும் அக்கிராமத்துக்குச் சென்று அந்த வானத்திலிருந்து வந்த தேவதை குறித்து விசாரித்தனர். அதன்பின் அக் கிராமத் தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பொம்மை ஒன்றும் தேவதை அல்ல எனவும் அது உண்மையில் பாலியல் பொம்மையெனவும் பொலிஸார் கண்டறிந்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.